இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோஹித்த போகல்லாகம இன்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரோஹித போகல்லாகம கொலோம்போ மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரோஹித போகல்லாகம பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கிட்கு பலமுறை அழைத்தும் நீதிமன்றில் ஆஜராக தவறியமையால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.











