EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!

பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!

ஐப்பசி 17, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) சட்டப் பீடத்தில் பயின்று வருபவரும் படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவருமான கைதி ஒருவரின் பல்கலைக்கழக வருகை, பிற மாணவர்கள் மத்தியில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜெப்ரி ஜோர்ஜ் இவெர்ட் (Jeffrey George Ewert) என்ற இந்த கைதி, பகல்நேர பரோல் (day parole) விடுப்பில் உள்ளார். அந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட வகுப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வன்முறைப் பின்னணி குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், இது தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் பல மெக்கில் பல்கலைக்கழக மாணவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு வன்முறைத் தாக்குதல்களுக்காக ஜெப்ரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு பெண்ணைக் கொலை செய்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், மற்றொரு சந்தர்ப்பத்தில் 15 வயது சிறுமியைத் தாக்கி கடுமையாகக் காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் அந்தச் சிறுமி வாழ்நாள் முழுவதும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பரோல் பெறுவதற்கு முன்னர் தனது தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்த ஜெப்ரி, கடந்த 2025ஆம் ஆண்டு பகல்நேர பரோலில் விடுவிக்கப்பட்டார்.

மெக்கில் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை நடைமுறைகளின்போது குற்றவியல் பின்னணிப் பரிசோதனைகள் பொதுவாக மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், தனியுரிமச் சட்டங்களைக் காரணம் காட்டி மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்கள் வரின் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்கில் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை
கியூபெக்

மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

ஐப்பசி 17, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!

ஐப்பசி 17, 2026
வீடற்ற நபர் மீது சிறுநீர் கழித்தக் குற்றச்சாட்டு: அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
கியூபெக்

வீடற்ற நபர் மீது சிறுநீர் கழித்தக் குற்றச்சாட்டு: அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

ஐப்பசி 17, 2026
கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்
கியூபெக்

கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்

ஐப்பசி 16, 2026
மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!
கியூபெக்

மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!

ஐப்பசி 16, 2026
கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!
கியூபெக்

கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!

ஐப்பசி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

10 மணத்தியாலங்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

10 மணத்தியாலங்கள் முன்னர்
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

9 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check