EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
யேமன் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் மீது ஹூதிகள் தாக்குதல்!

யேமன் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் மீது ஹூதிகள் தாக்குதல்!

ஐப்பசி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யேமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அரசுப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஷப்வா மாகாணத்தில் ஷப்வா பாதுகாப்புப் படை பயிற்சி முகாமை இலக்கு வைத்து ஹூதிகள் மூன்று பாலிட்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பெயரைக் வெளியிட விரும்பாத உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஷப்வா மாகாணத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இரத்தம் தோய்ந்த உடல்கள் தரையில் சிதறிக்கிடப்பைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

யேமனில் செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள பகுதிகளை நோக்கி ஹூதிகள் செப்டம்பர் மாதம் முன்னேறியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

சவுதி படைகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பயிற்சி முகாமைத் தாக்கியதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். எனினும், சவுதி அதிகாரிகள் தரப்பில் உடனடியாக எந்தவிதப் பதிலும் அளிக்கப்படவில்லை.

ஏடன் வளைகுடாவை நோக்கியுள்ள ஆற்றல் வளம் நிறைந்த தெற்கு-மத்திய கடலோர மாகாணமான ஷப்வாவில், ஏமனின் மிகப்பெரிய தொழில் முதலீடான ‘பால்ஹாஃப்’ (Balhaf) திரவ இயற்கை எரிவாயு நிலையம் அமைந்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அரசாங்கம் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

2022-இல் இரு தரப்பினரும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!
உலகம்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!

ஐப்பசி 20, 2026
ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
உலகம்

ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

ஐப்பசி 20, 2026
ஜம்மு காஷ்மீரில் கட்டுமான தளத்தில் நிலச்சரிவு!
உலகம்

ஜம்மு காஷ்மீரில் கட்டுமான தளத்தில் நிலச்சரிவு!

ஐப்பசி 20, 2026
சவூதியில் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை!
உலகம்

சவூதியில் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை!

ஐப்பசி 20, 2026
உக்ரைன், சூடான் அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அமெரிக்காவில் நீடிப்பு!
உலகம்

உக்ரைன், சூடான் அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அமெரிக்காவில் நீடிப்பு!

ஐப்பசி 20, 2026
பிரான்சில் சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு!
உலகம்

பிரான்சில் சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு!

ஐப்பசி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

12 மணத்தியாலங்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

6 நாட்கள் முன்னர்
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

5 நாட்கள் முன்னர்
பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு –  தேரரிடம் வாக்குமூலம் பதிவு

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு – தேரரிடம் வாக்குமூலம் பதிவு

10 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check