ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் ஏற்கனவே வெளியான ‘அலாக்கா லோவா’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக இத்திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவிருந்தது.
எனினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்துடனான மோதலைத் தவிர்க்கவும், தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு வழிவிடவும் தனுஷ் தனது ‘ஓம்’ படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து இப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











