EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்!

காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்!

ஐப்பசி 18, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையிசை உலகில் தனது கானம் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா. இவரது மறைவு திரையுலகினர் மட்டுமன்றி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரும்பாறையில் எம்.சி. செல்லையா – மரிய தாஸ் தம்பதிக்கு மகனாக கடந்த 1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்தவர் தேவா. இவரது இயற்பெயர் தேவநேசன் செல்லையா ஆகும். சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ள நிலையில், இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் பிரபல இசையமைப்பாளராக உள்ளார்.

இளையராஜாவின் அண்ணன் கங்கை அமரனிடம் இசை பயின்ற தேவா, சினிமாவில் வாய்ப்புப் பெற பல ஆண்டுகள் போராடினார்.

சுமார் 20 ஆண்டுகள் பின்னணிப் பாடகர்களுக்கு மேடைகளில் பாடிக்கொண்டும், பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றிய அவர், 1988இல் வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 1989இல் வெளிவந்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த தேவா, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘காதல் கோட்டை’, ‘ஆசை’, ‘பவித்ரா’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குறிப்பாக, 1990 முதல் 1999 வரையிலான பத்தாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், அதிகபட்சமாக 1995ஆம் ஆண்டில் மட்டும் 36 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என இதுவரை 400 முதல் 430 படங்கள் வரை அவர் இசையமைத்துள்ளார்.

கிராமிய மண் வாசனை, குத்துப்பாட்டு மற்றும் கானா பாட்டு ஆகியவற்றின் மூலம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைத்ததால் அவர் ‘தேனிசைத் தென்றல்’ மற்றும் ‘கானா கிங்’ என அழைக்கப்படுகிறார்.

மேலும், ரஜினி படங்களின் டைட்டில் கார்டுக்கான பின்னணி இசையில் இவரது பங்கு மிக முக்கியமானதாகும்.

கலைமாமணி விருது (1996), தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பல்வேறு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

விருதுகளைத் தாண்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தேவா, 90-களில் வருடத்திற்கு 30 முதல் 40 படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓராண்டை நிறைவு செய்த ‘பைசன் காளமாடன்’!
சினிமா

ஓராண்டை நிறைவு செய்த ‘பைசன் காளமாடன்’!

ஐப்பசி 18, 2026
நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’
சினிமா

நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

ஐப்பசி 18, 2026
நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்!
சினிமா

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்!

ஐப்பசி 17, 2026
தீபாவளி ரேசில் களமிறங்கும் தமிழ்ப் படங்கள்!
சினிமா

தீபாவளி ரேசில் களமிறங்கும் தமிழ்ப் படங்கள்!

ஐப்பசி 17, 2026
ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!
சினிமா

ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!

ஐப்பசி 15, 2026
வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!
சினிமா

வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

8 மணத்தியாலங்கள் முன்னர்
பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

4 நாட்கள் முன்னர்
மாங்குளத்தில் 2ஆம் லெப். மாலதியின் நினைவேந்தல்

மாங்குளத்தில் 2ஆம் லெப். மாலதியின் நினைவேந்தல்

6 நாட்கள் முன்னர்
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

1 நாள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check