கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் தான் நேரில் பங்கேற்கப்போவதில்லை என கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டன் (Paul St-Pierre Plamondon) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பளிப்பது தொடர்பாக பிரதமர் மார்க் கார்னிக்கும் (Mark Carney) கியூபெக் முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலேயே, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரங்கில் சர்வதேசப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுவதற்குத் தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என கியூபெக் முதலமைச்சர் பிளமண்டன் வலியுறுத்தி வந்த போதிலும், பிரதமர் மார்க் கார்னி அவருக்கு உரையாற்றும் வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, உச்சிமாநாட்டின் தூதுக்குழு உறுப்பினர்களுக்குக் திறந்த கடிதம் ஒன்றை எழுதிய கியூபெக் முதலமைச்சர் பிளமண்டன், மாநாட்டைத் தான் புறக்கணிப்பதாக உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், மாநாட்டின் நிகழ்வுகளில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகக் கியூபெக்கின் தலைமை இராஜதந்திரியான பாஸ்கல் பாரடிஸை (Pascal Paradis) அனுப்பி வைப்பதாக, பிளமண்டன் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.











