செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக 55-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அதன்போது, தவெக ஆட்சி அமைந்த இந்த 6 மாதத்தில் மக்களுக்குக் கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு எனத் தெரிவித்த அவர், தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது என்றார்.
மேலும், முன்பு அரசு அலுவலகங்களில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நிலையில், இப்போது ரூ.10,000 வாங்கப்படுவதாகவும், லஞ்சம் இல்லாமல் எந்த அலுவலகத்திலும் காரியம் நடக்காது என்றும் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய அவர், விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்கியதாகவும், ரூ.200 கோடியை விட அதிகமாகக் கிடைக்கும் என நினைத்துதான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிற கட்சிகளைப் போல் இல்லாமல் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக என்றும், இதில் சாதாரண தொண்டனும் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும் என்றும் அவர் கூறினார்.
தன்மானம் மிக்கவர்களே அதிமுகவில் இருப்பதாகவும், சீசனுக்கு ஏற்ப கட்சி மாறுபவர்களைப் பற்றி கவலை இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.











