பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார்.
பிரஜா சக்தி மூலம் 54மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 மூலம் 45மில்லியன் ரூபா செலவில் 700மீற்றர் முகாவில் அண்ணமார் உள்ளக வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டினை புலோப்பளை பகுதியில் பயனாளியிடம் கையளித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் தே. சுஜீவன் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கூறியதாவது,
மல்லிகைப்பூ போன்ற பூக்களை வழங்குவதற்கான உபகரணங்கள், இயற்கை உரம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் “பாரிய நிதி” (4 கோடியே 50 இலட்சத்திற்கு மேல்) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தேநீர், சோடா என அனைத்திலுமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படுகிறது. இந்த வரி வருமானம் மற்றும் நிதி மூலமாகவே மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் சென்றடைகின்றன.
கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 இலட்சம் வீதம் 2,400 வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடுகளைப் பெறுவதுடன், பெருமளவு தொழிலுருவாக்கமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது.
பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், இனவாதம், மதவாதம் இல்லாத சிந்தனையுள்ள சமுதாயத்தை உருவாக்கி நாட்டைச் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நலனை மையப்படுத்திய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











