யாழ்ப்பாண நகரின் தூய்மை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரத் தூய்மை உள்ளிட்ட விடயங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நகரம் ஒரு சிலருக்குச் சொந்தமானதல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானது. எனவே, நகரின் சுகாதாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சூழலைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மாநகர சபை தனது பொறுப்பிலுள்ள சில விடயங்களில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உரிய பொறுப்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் நிறைவேற்ற வேண்டும் என இறுதியில் வலியுறுத்திய ஆளுநர், 2027 ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.











