EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் சிறியரக விமானம் விபத்து!

கியூபெக்கில் சிறியரக விமானம் விபத்து!

கார்த்திகை 12, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்திலுள்ள போஸ் (Beauce) பிராந்தியத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவரின் நிலைமை தீவிரமாக உள்ளபோதிலும், அவர் உயிரிழந்துவிட்டாரா என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என கியூபெக் மாகாண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயின்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் ‘நினைவுகூரல் நாள்’ (Remembrance Day) நிகழ்வுகளுக்காகவே இந்த விமானம் பயன்படுத்தப்படவிருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த நிலவரங்களை தாம் உன்னிப்பாகக் அவதானித்து வருவதாகவும், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கை லாபோயின்ட் ஜூனியருடன் (Guy Lapointe Jr.) தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும் கியூபெக் முதலமைச்சர் பிளமொண்டன் தெரிவித்துள்ளார்.

கியூபெக் நகரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செய்ன்ட்-ஜார்ஜஸ் (Saint-Georges) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 10-வது வீதிப் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“தற்போதைய நிலவரப்படி, விமான ஓட்டி அல்லது வேறு யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பது குறித்த முழுமையான விபரங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை” என்று குறிப்பிட்ட கியூபெக் முதலமைச்சர் பிளமொண்டன், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் மாகாண பொலிஸாரும் அவசர உதவிப் படையினரும் தொடர்ந்தும் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

‘குட்ஃபுட்’ நிறுவனத்தைக் கைப்பற்றுகிறது ‘ஃப்ரெஷ் ப்ரிப்’!
கியூபெக்

‘குட்ஃபுட்’ நிறுவனத்தைக் கைப்பற்றுகிறது ‘ஃப்ரெஷ் ப்ரிப்’!

கார்த்திகை 12, 2026
ஸ்டெஃபனி மார்ட்டினுக்கு சிறப்பு ஆலோசகர் பதவி!
கியூபெக்

ஸ்டெஃபனி மார்ட்டினுக்கு சிறப்பு ஆலோசகர் பதவி!

கார்த்திகை 12, 2026
டிரூ-ரிவியர்ஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் படுகாயம்
கியூபெக்

டிரூ-ரிவியர்ஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் படுகாயம்

கார்த்திகை 11, 2026
CF Montreal கால்பந்து கிளப் விற்பனை – அரச நிதியுதவி இல்லை என அறிவிப்பு!
கியூபெக்

CF Montreal கால்பந்து கிளப் விற்பனை – அரச நிதியுதவி இல்லை என அறிவிப்பு!

கார்த்திகை 11, 2026
மொன்றியல் யூதப் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு – குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை!
கியூபெக்

மொன்றியல் யூதப் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு – குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை!

கார்த்திகை 11, 2026
கியூபெக்கில் நூற்றாண்டு பழமையான ஹோட்டல் ஒன்று தீக்கிரை!
கியூபெக்

கியூபெக்கில் நூற்றாண்டு பழமையான ஹோட்டல் ஒன்று தீக்கிரை!

கார்த்திகை 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

11 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

4 நாட்கள் முன்னர்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

12 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

12 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check