கியூபெக் மாகாணத்தில் உள்ள டிரூ-ரிவியர்ஸ் (Trois-Rivières) நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கோடரியே ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாகக் காவல்துறையினருக்குக் கிடைத்த அவசர அழைப்பையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் டிரூ–ரிவியர்ஸ் நகரைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மீது, ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











