இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை புதுடில்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா – பிரித்தானியா ‘விஷன் 2035’ (Vision 2035) திட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த இந்தியா – பிரித்தானியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிதித் தொழில்நுட்பம் (Fintech) மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கும் ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) அமைப்பின் பணிகளையும் இந்தியப் புத்தாக்கவியலாளர்களின் பங்களிப்பையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் ஆகியோருக்குத் தனது வாழ்த்துகளையும் பிரதமர் மோடி இதன் போது தெரிவித்துக்கொண்டார்.











