EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் 79 வயதுடைய பெண் மற்றும் 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலபே, கல்கிசை, ஏறாவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கல்கிசை, காலி – கொழும்பு வீதியைக் கடக்க முற்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர் கார் ஒன்றில் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியின் ஏறாவூர், காட்டுப்பள்ளி வீதிச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மணம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய பின்னர் கார் ஒன்றுடன் மோதியுள்ளது. இதில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை, கல்முனை – அம்பாறை வீதியில் எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மல்வத்தை 02 பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த செலுத்துநரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செலுத்துநர் உயிரிழந்துள்ளார். லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே, ஹொரஹேன சந்தியிலிருந்து ஹோகந்தர சந்தி நோக்கி வனகுரு மாவத்தையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், நான்கு விபத்துக்கள் குறித்தும் அந்தந்தப் பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

5 நாட்கள் முன்னர்
ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

3 நாட்கள் முன்னர்
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

5 மணத்தியாலங்கள் முன்னர்
வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

6 நாட்கள் முன்னர்
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

6 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check