கியூபெக் மாகாணத்திலுள்ள சாகுனே (Saguenay) நகரின் லா பே (La Baie) பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவர், மூன்று மாதப் பெண் குழந்தையொன்றைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி லா பே பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குறித்த குழந்தை சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கருதிய பொலிஸார், கியூபெக் மாகாணப் பொலிஸ் சேவையின் (Sûreté du Québec) குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர், உயிரிழந்த குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லா பே பகுதியில் சுமார் 100 பேர் ஒன்றுகூடி இரங்கல் நிகழ்வொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











