EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மது, புகைத்தலுக்கு எதிராக தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் – MA சுமத்திரன்

மது, புகைத்தலுக்கு எதிராக தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் – MA சுமத்திரன்

கார்த்திகை 11, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மது, புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமத்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் நகரில் இடம்பெற்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமாக நடைபெற்றது.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியில் 16 மதுபானசாலைகள் திறப்பதற்கு காரணம் யார்? இதனை மக்கள் அறிய வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்து மதுபானசாலைகள் திறக்கும் போது ஏன் போராட்டம் நடைபெறவில்லை. ஏன் மெளனமாக இருக்கிறார்கள்?

மதுபானசாலைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். தடுத்தோம். ஏன் இங்கு தடுக்க முடியாது போனது?கிளிநொச்சியில் முழங்காவிலில் பகுதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட முயற்சித்தபோது மக்கள் என்னிடம் வந்தார்கள். அதற்கு எதிராக வழக்கு போட்டு மூடினோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறு மக்களின் ஒத்துழைப்புடன் மூடினோம். மன்னாரில் திறக்கப்பட்ட மதுபானசாலை மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. ஆனால் கிளிநொச்சியில் எதிர்க்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன?

யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டில் மதுபானசாலைக்கு எதிராக வழக்கு செய்கிறோம். மக்கள் என்னிடம் வந்தால் அத்தனை மதுபான சாலைகளையும் மூடுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என இன்று வாக்குறுதி தருகிறேன்.

இளம் தலைமுறைகளை மதுவுக்கு அடிமையாக்குவதற்கு மதுபான சாலைகள் தாக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புகள் இல்லாமையால் இளைஞர்கள் தவறான பாதைக்குள் செல்ல முனைவார்கள். மக்கள் இணைந்தால் நாங்கள் வழக்குகள் மூலம் மூடுவிப்போம். யாருடைய சிபாரிசில் மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டது என்று கேளுங்கள்.

தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சியினர் மது, புகைத்தலுக்கு எதிராக தீர்மானம் எடுத்தார்கள். மது, புகை பாவிக்கக் கூடாது என்று இளைய சமுதாயத்தை பாதுகாக்க பிரபாகரன் கட்டளையிட்டார். அதனால் இளம் தலைமுறையினர் பாதுகாக்கப்பட்டனர். அதற்கு முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மது, புகைத்தல் பயன்படுத்தக்கூடாது. என்று சமூக கோட்பாடுகளுடன் உருவாக்கினர். அதனால் கட்சி சமூக கோட்பாடுகளுடன் இயங்கியது.

அவ்வாறு தமிழரசுக் கட்சி சமூகத்துடன் இணைந்துள்ளது. இந்த நிலையில்தான் மதுபானசாலைகளை மூட வேண்டும் என நாங்கள் முயற்சிக்கிறோம். இதற்காக நான் தொர்ந்தும் நீதிமன்றம் ஏறுகிறேன். கிளிநொச்சி பரந்தனில் உள்ள Top மதுபானசாலையை மூடுவோம். அத்துடன் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஏனைய மதுபானசாலைகளையும் மக்களின் ஒத்துழைப்புடன் மூடுவோம்.

எமது கட்சியிலும் தூய்மைப்படுத்தல் அரசியலை முன்னெடுக்கிறோம். முல்லைத்தீவில் மது அனுமதி கொடுத்தவர் தானாக விலகினார். அவ்வாறு மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிச்சயமாக போதைக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் சமூக கோட்பாடுகள் பாதுகாக்கும் வகையில் கட்சியில் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவோம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!
அண்மைய செய்திகள்

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

ஆனி 9, 2026
பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!
அண்மைய செய்திகள்

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

ஆனி 9, 2026
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 9, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆனி 9, 2026
பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஆனி 9, 2026
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி
அண்மைய செய்திகள்

யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

ஆனி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

5 நாட்கள் முன்னர்
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

4 நாட்கள் முன்னர்
சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

20 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
கடவத்தை பகுதியில் தீ விபத்து

கடவத்தை பகுதியில் தீ விபத்து

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In