EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க..

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க..

மார்கழி 9, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டின் கார்த்திகை தீப பண்டிகை டிசம்பர் 13 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வீடுகளை தீபங்களால் அலங்கரித்து, கடவுளுக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். அதில் சிலர் கார்த்திகை பொரி, பணியாரம், அப்பம் போன்றவற்றை செய்வது வழக்கம்.

நீங்கள் இதுவரை கார்த்திகை தீபத்திற்கு என்று ஸ்பெஷலாக எந்த ஒரு பலகாரமும் செய்ததில்லை என்றால், இந்த ஆண்டு அப்பம் செய்யுங்கள். இந்த அப்பம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். முக்கியமாக இது சுவையாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷலாக எப்படி அப்பம் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் – 3/4 கப்

* வெதுவெதுப்பான பால் – 3/4 கப்

* கோதுமை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* உப்பு – 1 சிட்டிகை

* ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

* ஆப்ப சோடா – 1 சிட்டிகை

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் வெல்லத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் வெதுவெதுப்பான பாலை 3/4 கப் ஊற்றி, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, 1/4 கப் அரிசி மாவு, உப்பு 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன், ஆப்ப சோடா 1 சிட்டிகை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல பாலை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை வெல்ல பால் போதவில்லை என்றால், காய்ச்சிய பாலை கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து, எண்ணெயில் ஒரு இடத்தில் ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அந்த மாவு தானாகவே மேலெழுந்து வரும், அதன் பின் கரண்டியால் அதை திருப்பி போட வேண்டும். இப்படி இந்த அப்பத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதே போல் அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சொப்ட்டான அப்பம் தயார்.

 

தொடர்புடைய செய்திகள்

இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!
ஆரோக்கியம்

இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!

ஆவணி 15, 2026
சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?
ஆரோக்கியம்

சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?

ஆவணி 15, 2026
சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது சரியா
ஆரோக்கியம்

சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது சரியா

ஆவணி 15, 2026
தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகள்…!
ஆரோக்கியம்

தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகள்…!

ஆவணி 14, 2026
மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம்
ஆரோக்கியம்

மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம்

ஆவணி 11, 2026
முகத்தில் அதிகமாக Powder பயன்படுத்தினால் என்னநடக்கும்?
ஆரோக்கியம்

முகத்தில் அதிகமாக Powder பயன்படுத்தினால் என்னநடக்கும்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

4 மணத்தியாலங்கள் முன்னர்
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

6 நாட்கள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

1 நாள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

3 மணத்தியாலங்கள் முன்னர்
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In