மன்னார் மாவட்ட இளைஞர்களால் பிளாஸ்டிக் பொருட்களை அகழ்வு செய்யும் சிரமதானம் நேற்று சனிக்கிழமை(24) மன்னார் கோந்தப்பிட்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் பிரியந்தா ஏற்பாட்டில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தலைமையில், குறித்த சிரமதான பணி இடம் பெற்றது.
இதன் போது சேகரித்த பிளாஸ்டிக் பொருட்கள் உரிய அமைப்பிற்கு கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.