ஈரோஸ் அமைப்பு மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் உள்ளிட்டோர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (2) அம்பாறையில் ஜக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயாகமகேயிடம் இணைந்து கொண்டனர்.
ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி தலைவர் இரா.பிரபாகரன் தலைமையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சி பிரதான கணக்காளர் க.கண்ணன், திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் சா.நவராஜா, பொத்துவில பொறுப்பாளர் வ.பிறேமானந்தன், அம்பாறை மாவட்ட பெண்கள் தலைவி அ.பிரதீபா உட்பட்ட குழுவினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை நகரிலுள்ள ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார காரியாலயத்தில் ஜக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயாகமகேயிடம் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.
அதேவேளை ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எச். அப்துல் ரகுமான், எம்.ஜ.அஸ்மீர் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டதையடுத்து அவர்களை சமபிராய பூர்வமாக வரவேற்று அவர்களுக்கான பொறுப்புக்களை தயாகமகே வழங்கி வைத்தார்