EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
Jaffnaரிக்ரொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி – யாழில் மூன்று பெண்கள் கைது.

ரிக்ரொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி – யாழில் மூன்று பெண்கள் கைது.

புரட்டாதி 5, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவரது வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அழகிய பெண்ணொருவரின் ரிக் ரொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வீடியோக்களை பார்த்து, வீடியோக்கள் வரும் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணி உள்ளார்.

அந்த இலக்கத்தில் இருந்து கதைத்த பெண்ணும் தனக்கு 22 வயது , தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என கூறி பழக ஆரம்பித்து பழக்கம் நெருங்கிய தொடர்பாக மாற பல்வேறு கட்டங்களில் , பல்வேறு காரணங்களை கூறி சுமார் 45 இலட்சத்துக்கும் மேலாக பணம் பெற்றுள்ளார்.

பெண்ணிடம் வீடியோ கோல் கதைக்க பல முறை சுவிஸ் நாட்டவர் முயற்சித்த போதிலும் , அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் , அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , பெண்ணை நேரில் சந்திக்க கோரிய போதிலும் அப்பெண் நேரில் சந்திக்க மறுப்பு தெரிவித்து , தொடர்பை துண்டிக்க , சந்தேகம் அடைந்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ரிக் ரொக் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போது , அப்பெண்ணுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது

அதனை தொடர்ந்து சுவிஸ் நாட்டில் இருந்து பணம் போடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து , கணக்கிலக்கத்திற்கு சொந்தமான பெண்ணை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தனக்கு தெரிந்த அன்ரி தான் எனது கணக்கு இலக்கத்திற்கு பணம் போட சொல்லி , பணம் போடப்பட்டது என கூறியுள்ளார்.

அந்த பெண் கூறிய அன்ரியான 47 வயதான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,

குறித்த 47 வயது பெண்ணுக்கும் , சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருக்கு இடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த முறை யாழ்ப்பாணம் வருகை தந்து அப்பெண்ணுடன் நெருக்கமாகவும் பழகியுள்ளார்.

பின்னர் அவர் சுவிஸ் நாட்டிற்கு சென்ற பின்னர் , இப் பெண்ணுடனான தொடர்பை குறைத்துள்ளார். இந்நிலையில் அவரின் பலவீனங்களை அறிந்திருந்த குறித்த பெண் , தனது நண்பியின் பெயரில் உள்ள ரிக் ரொக் ஐடியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகிய பெண்ணொருவர் இருப்பதனை அவதானித்து , அப்பெண்ணின் வீடியோக்களை தரவிறக்கி , இவருக்கு வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி , அப்பெண்ணின் பெயரில் உறவை வளர்த்துள்ளனர்.

பணம் போட சொல்லி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் உள்ள பெயரும் , ரிக் ரொக் வீடியோவிலும் உள்ள பெயரும் ஒன்றாக இருந்ததமையால் , அவரும் சந்தேக படாது பணத்தினை அந்த கணக்கு இலக்கத்திற்கு போட்டுள்ளார்.

பணத்தினை தொடர்ந்து ஒரு கணக்கு இலக்கத்திற்கு பெறாது , மற்றுமொரு பெண்ணின் கணக்கு இலக்கத்தினையும் கொடுத்து . அந்த பெண்ணின் கணக்கு இலக்கம் ஊடாகவும் பணத்தினை பெற்றுள்ளனர் என்பது விசாரணைகள் ஊடாக பொலிஸார் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து பிரதான சந்தேக நபரான 47 வயதான பெண்ணும் , வங்கி கணக்கு இலக்கத்தின் உரிமையாளர்களான இரு பெண்களுமாக மூன்று பெண்களையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை முற்படுத்தியவேளை , மூவரும் தம் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதுடன் , பணத்தினையும் மீள வழங்குவதாக மன்றில் உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து மூவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

 

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

14 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

14 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

14 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In