காசாவில் பயணக்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துமாறு கோரி,இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தலைமையகம் மற்றும் ஏனைய அரசாங்க கட்டடங்களை
அண்மித்த பகுதியில் ஒன்று கூடிய எதிர்ப்பாளர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அத்துடன் பயணக்கைதிகளை மீளப்பெறுவதனை உறுதி செய்வதற்காக உடன்பாட்டை எட்டுமாறும் வலியுத்தியுள்ளார்.











