EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffnaதமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்.

Jaffnaதமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்.

ஐப்பசி 15, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது, வழக்கைத் தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024 இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறிதானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 1ஆம் மற்றும் 2ஆம் எதிராளிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு என்ற பெயரில் எவ்வித கூட்டங்களையும் கூட்டக்கூடாது என்ற இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1ஆம் எதிராளி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் செயற்படக்கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2ஆம் எதிராளி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற கோதாவில் செயற்படக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் வழக்காளியின் சார்பில் வேண்டுதல் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி த. தினேஷின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழக்காளி சார்பில் தோன்றினார். இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

15 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

15 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

15 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

15 மணத்தியாலங்கள் முன்னர்
வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In