EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கு மாகாணத்தின் இடர் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில்

வடக்கு மாகாணத்தின் இடர் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில்

கார்த்திகை 22, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர்,எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள். மேலும் பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும், என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் மாவட்ட மருத்துவமனையூடாகச் செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின்போது இடம்பெயர நேரிட்டால் அவர்களை தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணி நேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ள நிலைமை ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தின் உப்பாறு மற்றும் தொண்டமானாறு நன்நீரேரிகளினதும், வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாள்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் அதைக் கருத்தில் கொண்டு அவை திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது. 350 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும். இருப்பினும் நீர் வெளியேற்றும் பிரதேசத்துக்கு வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.

இடர்நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான வீதிகளை ஒட்டி மக்கள் வீட்டு மதில்களை அமைத்திருப்பதன் காரணமாக, வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை உருவாக்க முடியாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக வீடுகள் மற்றும் மதில்கள் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் அதற்கு முரணாக அவற்றை அமைப்பதால் இந்த நிலைமை ஏற்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே அனுமதியை வழங்குவதுடன் மாத்திரமில்லாது, அவற்றை தொடர் கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும் என கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கைவிடுத்தார்.
கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். குறிகாட்டுவான் இறங்குதறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர்.

கால்நடைகள் கடந்த காலத்தில் இடர்நிலைமையில் அதிகளவில் உயிரிழந்தமையை கருத்தில்கொண்டு, கால்நடைகளை முற்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்குரிய ஒழுங்குகள் கண்டாவளை மற்றும் நானாட்டானில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வீதிகளில் குப்பைபோடுபவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தமக்கு சமர்ப்பித்தால் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என வடக்கு மாகாண சிரே~;ட பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிகளில் குப்பைபோடுபவர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதற்குரிய வர்த்தமானி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநகர சபை சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினர் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு குப்பைகளைப்போடுவதாகவும் இது கவலையளிப்பதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குப்பைகளை அகற்றி துப்புரவான நகராக்குவதற்கான நடவடிக்கையை தாம் யாழ். மாநகர சபையுடன் இணைந்து செய்வதற்கு பொறுப்பெடுப்பதாக உள்;ராட்சி அமைச்சின் செயலர் தெரிவித்தார்

இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் இடர்நிலைமைகளின்போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் எனவும், அதேநேரம் யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

16 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

15 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

15 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In