காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் புதன்கிழமை வரையில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும் இடம்பெறாது என யாழ். மாவட்ட காணிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அதேவேளை சாதாரண சேவைகளில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான பிரதிகள் நான்கு நாட்களின் பின்னரே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.