அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
துருவிய கேரட் – அரை கப்
துருவிய பீட்ரூட் – அரை கப்
கருவேப்பிலை – ஒரு கொத்து
நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் ஒரு கப் அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரையும் சேர்த்து கலந்து விடுங்கள்.
தேவையான அளவிற்கு உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைத்து ஊற விடுங்கள். ஒரு 10 நிமிடம் ஊறியதும் இன்னும் நன்கு இறுகிவிடும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு கொத்து கருவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளுங்கள். நறுக்கிய மல்லி தழை அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை தலா அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக அடை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தோசை தேய்ப்பதற்கு தகுந்தார் போல தண்ணீர் விடுங்கள், அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.