இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்தார்.
இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கான பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் நம்புவதாக இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்த நம்புவதாகவும், பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள், தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் போன்ற பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.