EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை.

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை.

மார்கழி 3, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களில் ஒருவர்கூட தமக்கு நிவாரணம் தேவை என்று கேட்டதில்லை. உடலில் எந்தக் குறைபாடுகளும் இல்லாதவர்கள் நிவாரணம் தேவை, அது தேவை, இது தேவை என்று நாடும்போதும் அவர்கள் அப்படி எங்களை நாடியதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று சாதிக்கவே விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்.

அவர்களிடம் கடின உழைப்பு இருக்கின்றது. மாற்றாற்றல் உடையவர்கள் அரச அலுவலகங்களை அணுகும் வசதியை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு, பிரதேச செயலர் சா.சுதர்சன் அவர்களால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் ஆக்கங்களை உள்ளடக்கிய புதுப்பிரவாகம் நூல் வெளியிடப்பட்டதுடன், அது கண்பார்வையற்றவர்கள் வாசிக்கக் கூடிய வகையிலும் பிரெய்லி வடிவிலும், ஒலி வடிவிலும் வெளியீடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

1 நாள் முன்னர்
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

21 minutes முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

2 நாட்கள் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

6 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In