EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
கலாசாலை வீதியை புனரமைத்து தருமாறு மக்கள்  கோரிக்கை

கலாசாலை வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

மார்கழி 5, 2024
வகை: Uncategorized
A A
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும் , வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடியபாதம் வீதியில் இருந்து, கோப்பாய் இராச பாதை வீதி வரையிலான 1.515 கிலோ மீற்றர் தூரமான கலாசாலை வீதியினை காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கான பணிகள் கடந்த 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்தன.

யாழ்ப்பாணத்தில் கடுமையாக பெய்த மழை காரணமாக அப்பணிகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் மீளவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 03ஆம் திகதி முதல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் காலை 08.30 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் வீதி மூடப்பட்டு காப்பெட் இடும் பணிகளுக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆடியபாதம் வீதியில் இருந்து கலாசாலை வீதியின் நான்காம் ஒழுங்கை வரையிலான சுமார் 250 மீற்றர் தூரமான வீதி காப்பெட் இடப்படாமல் , வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கேட்ட போது , காப்பெட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இவ்வளவு தூர வீதியினையே செய்ய முடிந்தது மிகுதி வீதி இனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்திலேயே காப்பெட் இட ப்படும் என தெரிவித்துள்ளனர்

எங்களுடைய வீதி காப்பெட் வீதியாக புனரமைக்கப்படுகிறது என்பதால் தான் கடந்த மூன்று தினங்களாக வீதி மூடப்பட்டு இருந்த போதிலும் , சிரமங்களை சகித்து கொண்டோம். தற்போது வீதி பூரணமாக புனரமைக்காது இடை நடுவில் வேலையை முடிவுறுத்தி சென்றுள்ளனர்.

வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கு வீதியினை அகலமாக்கி , கற்கள் பரவப்பட்டு வீதி ஓரங்களில் கற்குவியல்கள் குவிக்கப்பட்டு காணப்பட்டது. இவர்கள் இடை நடுவில் விட்டு சென்றமையால் வீதி முதல் இருந்ததை விட மிக மோசமாக காணப்படுகிறது.

கலாசாலை வீதியில் தான் யாழ் . பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் , பாற்பண்ணை என்பவை உள்ளத்துடன் , திருநெல்வேலி சந்தைக்கு கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் இருந்து இந்த வீதியூடாகவே பலரும் போக்குவரத்து செய்வதனால் குறித்த வீதியினை முழுமையாக புனரமைத்து தருமாறு கோரியுள்ளனர்.

வீதியை இன்னும் புனரமைக்க சுமார் 250 மீற்றர் தூரம் மட்டுமே காணப்படுவதனால், அதனை அதிகாரிகள் யாரும் கவனத்தில் எடுத்து, அவற்றுக்கு இனி புதிதாக நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனவே இந்த வீதியினை முழுவதுமாக புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை , வீதியின் புனரமைப்பு பணியின் போது , வீதி முழுவதுமாக அளவு எடுக்கப்பட்டு , அதற்கான செலவீனம் மதிப்பீடு செய்யப்பட்டே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் வீதியின் மட்டம் (லெவெலிங்) எவையும் மதிப்பீடு செய்யப்படாமல் , பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையால் , காப்பெட் அளவு அதிகரித்தால் தான் வீதியினை முழுமையாக புனரமைக்க முடியாது சுமார் 250 மீற்றர் தூர வீதிக்கான காப்பெட் முடிவடைந்ததால் தான் அவை இடையில் நிறுத்தப்பட்டுள்ளது என மக்கள் சந்தேகமும் தெரிவித்தனர்.

அதேவேளை இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் தாம் கொண்டு சென்றுள்ளதாகவும் , தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சீனிக்குப் பதில்  பேரீச்சைப் பொடி
Uncategorized

சீனிக்குப் பதில் பேரீச்சைப் பொடி

ஆவணி 15, 2026
தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை  வைப்பவரா நீங்கள் ?
Uncategorized

தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை வைப்பவரா நீங்கள் ?

ஆவணி 14, 2026
இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை
Uncategorized

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை

ஆவணி 12, 2026
மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Uncategorized

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆவணி 12, 2026
கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை
Uncategorized

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

ஆவணி 12, 2026
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Uncategorized

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

3 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்
யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

3 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

5 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

13 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In