EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

ஆவணி 12, 2026
வகை: Uncategorized
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் பையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரையில் காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார்

ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Uncategorized

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆவணி 12, 2026
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Uncategorized

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவணி 11, 2026
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை
Uncategorized

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை

ஆவணி 5, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
Uncategorized

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

ஆனி 25, 2026
யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை
Uncategorized

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

மார்கழி 29, 2025
மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்
Uncategorized

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மார்கழி 20, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

2 மணத்தியாலங்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

5 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

1 நாள் முன்னர்
மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In