EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
செட்டிநாடு பழ பாயசம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

செட்டிநாடு பழ பாயசம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

மார்கழி 13, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். எந்த ஒரு விஷேச வீட்டிலும் உணவிற்கு பின் வழங்கப்படும் ஒரு இனிப்பு வகை பாயாசம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலும் பல வகை உண்டு. அந்த வரிசையில் நாம் இங்கு செட்டிநாட்டு பழ பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

– பால் – 2 கப்

– கன்டென்ஸ்ட் மில்க் – ⅓ கப்

– மாதுளைப் பழம் – 1 (பெரியது)

– மாம்பழம் – 1 (பெரியது புளிப்பில்லாதது)

– ஆப்பிள் – 1

– திராட்சை – ஒரு கொத்து (15-20 புளிப்பில்லாதது)

– வாழைப்பழம் – 1

– பாதாம் – 5

– பிஸ்தா – 5

– ஏலக்காய் – 2

– சர்க்கரை – 1 ஸ்பூன்

அரைக்க:

– பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்

– முந்திரி – 10

– பாதம் – 10

செய்முறை: – பச்சரிசியை சுத்தமாக தண்ணீர் சேர்த்து அலசி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

– முந்திரி பாதாமையும் நன்றாக கழுவி விட்டுகுறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

– நன்றாக ஊறியதும் பாதாமின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

– சுத்தம் செய்த பாதம், ஊற வைத்த முந்திரி மற்றும் பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

– ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அடுப்பில் வைத்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சூடானதும் அடுப்பை அணைக்கவும்.

– அதில் திராட்சையை சேர்த்து 2-3 நிமிடங்கள் வைத்திருந்து அலசி எடுத்து கொள்ளவும்.

– திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். – மாதுளை பழத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.

– ஆப்பிள் மற்றும் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

– வாழைப் பழத்தை மட்டும் தனியாக பாலில் சேர்க்கும் போது சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இது வாழைப்பழம் நிறம் மாறுவதை தடுக்கும்.

– பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். – உங்களுக்கு விருப்பமான அல்லது வீட்டில் இருக்கும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

– மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

– அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை சேர்க்கவும்.

– பால் நன்றாக பொங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். – அதனுடன் அரிசி மற்றும் நட்ஸ் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து விடாமல் கிளறவும்.

– அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக கிளறவும்.

– கடைசியாக அரைத்து வைத்த ஏலக்காய் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து பால் சிறிதளவு திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.

– பால் ரொம்பவும் திக்காகி விட்டால் ஆற வைக்கும் போது கெட்டியாகி விடும்.

– பால் நன்றாக ஆறியதும் நறுக்கி வைத்த பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் செட்டிநாட்டு பழ பாயசம் ரெடி!

தொடர்புடைய செய்திகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்  ஊதா நிற உணவுகள்
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊதா நிற உணவுகள்

மார்கழி 16, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

4 மணத்தியாலங்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

4 நாட்கள் முன்னர்
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In