EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில்  தொடரும் கையெழுத்து போராட்டம்.

பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் கையெழுத்து போராட்டம்.

தை 3, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாரான போது அங்குவந்த கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் ஒலிபெருக்கி அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சியில் மட்டும் இவ்வாறு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியமைக்கு ஏற்ப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பொலிசார் குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ள அனுமதியளித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் குறித்த இடத்தில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்று வருகிறது.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் மத தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையொப்பங்களை பதிவுசெய்கின்றனர்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்
அண்மைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

ஆனி 12, 2026
செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

ஆனி 12, 2026
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

ஆனி 12, 2026
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

ஆனி 12, 2026
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஆனி 12, 2026
மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

ஆனி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

3 நாட்கள் முன்னர்
சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

3 நாட்கள் முன்னர்
சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல அனுமதி

18 மணத்தியாலங்கள் முன்னர்
மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

7 நாட்கள் முன்னர்
ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர்  உயிரிழப்பு

ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In