EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு – மீண்டும் தவணைக்கு.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு – மீண்டும் தவணைக்கு.

தை 17, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் 20.04.2019 கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி சாட்சியமளிப்பதற்காக வழக்கு விசாரணைகள் 2025.01.16 அன்று தவணையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று 16.01.2025 முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது.

இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார். தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக குறித்த வழக்கு மீண்டும் 2025.04.03 அன்று தவணை யிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த நபரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியபோது, அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.

குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்ததுடன், அவரை குறித்த இடத்தில் வருகை தந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளரை பழிவாங்கும் நோக்கில் அன்று மாலை முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு  பாதிப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு

புரட்டாதி 20, 2026
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

5 நாட்கள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

2 நாட்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In