டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்தது போன்ற பழமாகும். இந்தப் பழம் தற்போது எல்லாக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய பழமாக உள்ளது.
இது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில், பச்சை, மஞ்சள் நிற முட்களைக் கொண்டு காணப்படும்.
வெள்ளை நிறச் சதைகளில் கறுப்பு நிற விதைகள் கொண்டு காணப்படக் கூடியது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தப் பழம் சுவையானது மட்டுமல்ல. ஆரோக்கியமான பழமும் கூட இந்தப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.
டிராகன் பழத்தில் உள்ள Vitamin C நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடி உடல் பலவீனம் அடைவதைத் தடுக்கக்கூடியது.
டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.
சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகளைத் தடுக்கும். டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும்.
உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டிராகன் பழங்களை நீங்களும் உட்கொண்டு உடலிற்கு கிடைக்கக் கூடிய ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்