EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !

மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !

சித்திரை 4, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஞாயிறு வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

இலங்கையில் தங்கியிருக்கும்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரத்துக்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடக்கி வைப்பார்.

இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் இன்று கைச்சாத்திடப்படலாமெனத் தெரிகிறது.சம்பூரில் மின் திட்டமொன்றை ஆரம்பிக்க திருகோணமலைக்கு பிரதமர் செல்லவிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களையொட்டி அவர் அங்கு செல்லமாட்டாரெனச் சொல்லப்பட்டது.

கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி நாளை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக இலங்கை புறப்பட முன்னர் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவொன்றை இட்டார்.அதில் ஏப்ரல் நான்கு முதல் ஆறு வரையான திகதிகளில் இலங்கைக்கான இருநாள் விஜயமொன்றை மேற்கொள்கிறேன். கடந்த டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க மேற்கொண்டிருந்த மிகவும் வெற்றிகரமான விஜயத்தைத் தொடர்ந்து இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது.

‘பகிரப்பட்ட எதிர்காலம் ஒன்றுக்கான பங்குடைமைகளை வலுவாக்கல்’ என்ற கூட்டு தொலைநோக்கு குறித்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும். அதேவேளை, நமது பகிரப்பட்ட இலக்குகளை உணர்ந்து கொள்வதற்கு மேலதிக வழிகாட்டல்களையும் இவ்விஜயம் வழங்குகின்றது.

கடந்த கால அடித்தளங்ளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ்விஜயங்கள், நமது மக்களின் நலன்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலன்களுக்காக நமது நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குமென நான் நம்புகின்றேன்.

மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
செயற்படுத்தப்படவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 06 ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் எனப் பலரும் வருகை தரவுள்ளனர்

மேல் மாகாண மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்ன, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளைக் கண்காணிக்க உள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

16 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

16 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In