EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பாப்பரரிசரின் மறைவு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது – சி.வி.கே.சிவஞானம்

பாப்பரரிசரின் மறைவு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது – சி.வி.கே.சிவஞானம்

சித்திரை 24, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களை மட்டுமன்றி மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

றோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்ட லத்தின் அமெரிக்க நாடான ஆஜென்ரீனாவைச் சேர்ந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் மறைவு உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களை மட்டுமன்றி மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ மதக் கட்டமைப்பின் தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸ், இன, மத, பூகோள வேறுபாடுகளை கடந்து ஒரு பெரிய வலுவற்றவர்களினதும், வசதியற்றவர்களதும், தேவைகளைத் தேடி அலையும் ஏதிலிகளதும் குரலாக ஒலித்தவர், அவர்களை நேசித்து அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

ரஷ்யா-உக்ரைன் யுத்தமென்றாலும் சரி, இஸ்ரேல் பலஸ்தீன யுத்தமென்றாலும் சரி சிரிய நாட்டு உள்நாட்டுப் போர் என்றாலும் சரி, போர் நிறுத்தப்பட்டு உலகம் முழுவதிலும் சமாதானம் நிலவ வேண்டும் என்ற மனித நேயம் மிக்க மாண்பு கொண்டவராகவும், உலக நாடுகளின் அனைத்துத் தலைவர்களினாலும் மிகவும் மதிக்கப்பட்ட பெரும் மதத் தலைவராக விளங்கினார்.

தமது காலத்தில் உலக அமைதி, ஒற்றுமை, சமாதானம் நிலைத்து நிற்கப்படுவதன் பொருட்டு பல நாடுகளுக்கு விஜயம் செய்து நல்லாசி வழங்கி ஊக்கப்படுத்தியவர்.

அவ்வாறான அவரது உலக நாடுகளின் சுற்றுப்பயணத்தில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் எமது நாட்டுக்கு வருகை தந்தமை பெருமைக்குரியது.

அதிலும் எமது வடக்கு மாகாணத்தின் பெருமைக்குரிய திருத்தலமான மன்னார் மடுமாதா திருத்தலத்திற்கு 2015.01.14ஆம் திகதி வருகை தந்தமை மதங்கள் கடந்து நாம் செய்த பெரும் பாக்கியமே.

இந்த பெரும் மதத்தலைவரது இழப்பினால் துயருறுவோர் அனைவருடனும் இலங்கை தமிழரசுக் கட்சியினராகிய நாமும் இணைந்து துயர் பகிர்ந்துகொள்கின்றோம் என அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

3 நாட்கள் முன்னர்
கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In