EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி  வழங்கப்படும் – அமைச்சர் ரி. பி. சரத்

யாழில். வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்கப்படும் – அமைச்சர் ரி. பி. சரத்

புரட்டாதி 4, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி.சரத்

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அந்நிலையில் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை நேரில் ஆராய வந்துள்ளோம்.

கிளிநொச்சியிலுள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்ற போது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளதை அவதானித்தோம்.

அதேவேளை கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.

மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.

கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர், மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளது.

அதனால் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் எனவே அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு கூறினார்.

இக் கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) கே. ஜி. பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

3 நாட்கள் முன்னர்
‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

43 minutes முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

3 நாட்கள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In