தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும் முதலாவது தமிழ் எதிர்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு இன்று (13) கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமிர்தலிங்கத்தின் திருவுருவ படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.











