EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வெஸ்ட்மவுண்ட் நகரசபை மேயர் மீது பதிவான எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

வெஸ்ட்மவுண்ட் நகரசபை மேயர் மீது பதிவான எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

ஆடி 20, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்திலுள்ள வெஸ்ட்மவுண்ட் (Westmount) நகரசபையின் மேயர் மைக்கேல் ஸ்டெர்ன் (Michael Stern), அந்த நகரசபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மரியாதைக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறி, அவருக்கு எதிராக 7 அறநெறி மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கியூபெக் நகராட்சி ஆணையம் (Quebec Municipal Commission) இந்தக் குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

கியூபெக் நகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின்போது, மேயர் மைக்கேல் ஸ்டெர்ன் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 8, 9 ஆம் திகதிகள் மற்றும் மே மாதம் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பணிரீதியான சந்திப்புகளில், நகரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், நிதிப் பணிப்பாளர், மனிதவளப் பணிப்பாளர், சட்டச் சேவைப் பணிப்பாளர் மற்றும் நில முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம், அந்த நகரசபை மேயர் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் பிரதிநிதி என்ற பதவியின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படக்கூடாது என்ற அடிப்படை விதியை மேயர் மீறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மேயர் மைக்கேல் ஸ்டெர்ன், தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்த்துப் போராடவுள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்
கியூபெக்

கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்

ஆடி 20, 2026
மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்
கியூபெக்

மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்

ஆடி 20, 2026
கியூபெக்கில் தீ விபத்து –  உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

கியூபெக்கில் தீ விபத்து – உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 20, 2026
மொன்றியல் அருகே சரக்கு ரயில் தடம்புரள்வு
கியூபெக்

மொன்றியல் அருகே சரக்கு ரயில் தடம்புரள்வு

ஆடி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

5 நாட்கள் முன்னர்
ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

4 நாட்கள் முன்னர்
படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

23 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In