இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஸ்பெயின் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
79 வயதான ஸ்பெயின் பிரஜையிடமிருந்து 2.198 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் சந்தை பெறுமதி 109.9 மில்லியன் என சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரஜை கடந்த 22 ஆம் திகதி சியாரா லியோனிலிருந்து அடிஸ் அபாபா, டோஹா வழியாக கட்டார் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்க திணைக்களம் முன்னெடுத்து வருவதுடன், போதைப்பொருளுடன் கைதான நபரை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










