இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக் கூடிய சூழலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரைக்கும் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,530 ஆக பதிவாகியுள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சகலரும் முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










