சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் செயலாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தை 2026 சிறப்பு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வு, “சிறுவர்களின் சிறப்பு சந்தையின் மகிழ்ச்சி!”எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலைச் சிறுவர்களின் வணிகச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சமூகத் தொடர்பாடல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சந்தை அனுபவத்தில், சிறுவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆட்சிமன்ற உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறுவர்களின் திறமைகளைப் பாராட்டி நிகழ்வைச் சிறப்பித்தனர்.











