சீரற்ற வானிலை நிலவுவதால் ஹட்டன் பொல்பிட்டிய மொரஹேனகம பகுதியில் உள்ள வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மண்சரிவில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் இதில் வீட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என எண்ணப்படுகின்றது.
மேலும் இப்பகுதியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.











