உணவுகளின் சுவையை மேலும் அதிகரிக்க வெங்காயத் தாள் உபயோகிக்கப்படுகிறது.
இதில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளமானவை. இதில் குறைவான கலோரிகளே காணப்படுகின்றது.
வெங்காயத்தாளில் விட்டமின் சி,பி,தயமின் உட்பட பல சத்துக்கள் உள்ளன.
வெங்காயத் தாளில் உள்ள பெக்டின் எனும் கார்போஹைட்ரேட்டானது, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
மேலும் கீல்வாதம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்து.
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
கண் நோய், கண் பிரச்சினைகளுக்கு வெங்காயத்தாள் சிறந்த நிவாரணியாக இருக்கும்.
வெங்காயத் தாளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு ஏற்றது.
இதில் உள்ளடங்கியிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும்.
கொலாஜன் உற்பத்திக்கு காரணமான விட்டமின் சி வெங்காயத்தாளில் அதிகம் உள்ளன.
எனவே வெங்காயத் தாளை அதிகளவில் உண்பது நல்லது










