யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், வெகுசன ஊடக அமைச்சர் கெளசல்யா ஆரியரத்னவிற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள் சம்பள முரண்பாடுகள், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ஷ பண்டார, யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் நளினி இன்பராஜ் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.











