EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில், துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து புறப்படும் நேரங்கள்:

காலை 6.00 மணி – துணுக்காய்
காலை 6.10 மணி – மல்லாவி
காலை 7.00 மணி – மாங்குளம்
காலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

தொடர்புடைய செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்
அண்மைய செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

ஆவணி 10, 2026
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!
அண்மைய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

ஆவணி 10, 2026
மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்
இலங்கை

மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

ஆவணி 10, 2026
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்
அண்மைய செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

ஆவணி 10, 2026
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா
இலங்கை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

ஆவணி 10, 2026
செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

4 நாட்கள் முன்னர்
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

7 நாட்கள் முன்னர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

4 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

19 மணத்தியாலங்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In