நேட்டோ அமைப்பின் முக்கிய கடலடித் தகவல் தொடர்பு கேபிள்களைச் சேதப்படுத்துவதற்காக ரஷ்யா மேற்கொண்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்தை நேட்டோ உறுப்பு நாடுகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சுவீடன் மற்றும் நோர்வே எல்லையோரக் கடல் பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலா வந்த ரஷ்யக் கப்பல் ஒன்று அவதானிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுக்கு இடையிலான தொலைத்தொடர்பு மற்றும் இணையக் கட்டமைப்பை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என நேட்டோ பாதுகாப்புப் படைகள் சந்தேகிக்கின்றன.
எனினும், உரிய நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பெருமளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலடி உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நேட்டோ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, இந்தச் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யத் தரப்பிலிருந்து உடனடி விளக்கங்கள் எதுவும் வெளிவரவில்லை.











