EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னிப்பையும் சகிப்புத் தன்மையையுமே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதங்களின் உண்மையான கோட்பாட்டை மதித்து சிவராசா அனோஜனை விடுதலை செய்க என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

கல்முனையை வதிவிடமாகக் கொண்ட சிவராசா அனோஜன் என்ற இளைஞர் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக ஓரிரு வசனங்களை எழுதினார் என்ற காரணத்திற்காக சவுதி அரேபிய நீதித்துறையால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் என்பவருக்கு சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்கள் தெரியாத நிலையில், தான் எழுதுகின்ற எழுத்தில் ஒரு மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் என்று தெரியாத நிலையில், அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிப்பது என்பதை ஒரு மனிதாபிமான செயலாகக் கருத முடியாது.

அவர் எழுதியது தவறு என்று அறிந்தவுடன் தனது சமூக வலைதளத்திலிருந்து அதனை அகற்றியது மாத்திரமல்லாமல், அதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில், அவரது அறியாமையால் செய்த சிறிய தவறுக்கு மரண தண்டனைதான் தீர்ப்பா என்ற கேள்வி எழுகின்றது.

சகல மதங்களுமே அன்பையும் சகிப்புத் தன்மையையுமே போதிக்கின்றன. அறியாமல், தெரியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றன. இவை அனைத்தையும் சவுதி நீதித்துறை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.

காசாவில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த உலக மக்களும் மொழி, மதம், இனம் கடந்து இத்தகைய மோசமான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு ஒருவரும் இல்லையா? இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா என்று தொடர்ந்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றோம்.

அவர்களது மொழி, மதம் பற்றி நாங்கள் யாரும் சிந்தித்ததில்லை. அவர்கள் மனிதர்கள், தனது சொந்த மண்ணில் வாழும் உரித்துடையவர்கள். அவர்களை அழித்தொழிப்பதற்கு யாருக்கும் உரித்தில்லை என்பதை இன்னமும் திடமாக நம்புகின்றோம். அவ்வாறுதான் உலக மனிதகுலம் இருப்பதாக நம்புகின்றோம். இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஒரு சிறிய தவறுக்காக, மரண தண்டனை விதிப்பதென்பது நியாயமானதா?

அந்த இளைஞனின் பெற்றோர் தமது வாழ்விற்காக அவரை நம்பியுள்ளனர். அவர் இல்லாவிட்டால் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்படும்.
சட்டங்களும் தண்டனைகளும் ஒரு மனிதனை திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும்.

அவரை இல்லாமல் செய்வதால் குற்றங்கள் குறைந்துவிடாது. எனவே இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் அந்நாட்டு மன்னருடனும் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, அந்த இளைஞரை மரண தண்டனையிலிருந்தும் ஏனைய பொருளாதார தண்டனையிலிருந்தும் காப்பாற்றி மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
அண்மைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

33 minutes முன்னர்
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

5 நாட்கள் முன்னர்
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

24 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In