EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

புரட்டாதி 22, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சுமார் 46 கோடி ரூபாய் பணத்தைக் காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது, அம்பிகாவின் தங்கையான நடிகை ராதா சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரின் விபரங்களின்படி, ராதா ‘ஏஆர்எஸ் கார்டன்ஸ்’ (ARS Gardens) எனும் பெயரில் தொழில் செய்து வந்ததாகவும், அதற்காக போரூரில் உள்ள தனியார் வங்கியொன்றில் நடப்புக் கணக்கு வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் அடிக்கடி பயணங்களில் இருப்பதால், பராமரிப்புச் செலவுகளுக்காகத் தொகை நிரப்பப்படாத, கையெழுத்திடப்பட்ட 5 அல்லது 6 காசோலைகளைச் சென்னையில் தான் தங்கும் வீட்டில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் பெயரை ‘ஆர்ஆர் கார்டன்ஸ்’ (RR Gardens) என மாற்றி, புதிய பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளார்.

இதனால் பழைய காசோலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய அவர், கையெழுத்திடப்பட்ட பழைய காசோலைகள் குறித்து மறந்துவிட்டுள்ளார்.

இந்நிலையில், செப்டம்பர் 17 ஆம் திகதி பழைய வங்கிக் கணக்குக் காசோலைகள் மூலமாக அம்பிகா என்ற பெயரில் பணப்பரிமாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வங்கியிலிருந்து தகவலளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காசோலைகளைத் தனது சகோதரியிடம் ஒருபோதும் வழங்கவில்லை என்றும், அத்தகைய பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் ராதா சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் காசோலைகளைத் தனது சகோதரர் மல்லிகார்ஜுனா நிரப்பியுள்ளதாகவும், அவரும் சகோதரி அம்பிகாவும் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சொத்தில் தனது பங்கைப் பெறுவதைத் தனது சகோதரியும் சகோதரரும் தடுத்ததாகவும் ராதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை
சினிமா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை

புரட்டாதி 22, 2026
மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்
சினிமா

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்

புரட்டாதி 22, 2026
‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி
சினிமா

‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி

புரட்டாதி 22, 2026
‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு

புரட்டாதி 20, 2026
புதிய அவதாரத்தில் ராஷ்மிகா: வெளியானது ‘மைசா’ படத்தின் டீசர்
சினிமா

புதிய அவதாரத்தில் ராஷ்மிகா: வெளியானது ‘மைசா’ படத்தின் டீசர்

புரட்டாதி 20, 2026
ஜெயிலர் 2 வில் திலீப்பாக நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு!
சினிமா

ஜெயிலர் 2 வில் திலீப்பாக நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு!

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

1 நாள் முன்னர்
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு

6 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

4 நாட்கள் முன்னர்
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

4 நாட்கள் முன்னர்
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In