EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்ராறியோ மாகாணத்தில் இடம்பெறவுள்ள இடைத்தேர்தலில், பிராண்ட்போர்ட் (Brantford) நகர மேயர் கெவின் டேவிஸ் (Kevin Davis) நேரடியாக கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பு இன்றி, அந்தக் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

கெவின் டேவிஸ் (Kevin Davis) வேட்பாளராக நேரடியாக நியமித்துள்ளமைக்குக் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய ஜனநாயக நடைமுறையான ’வேட்பாளர் தேர்வை (nomination contest) தவிர்க்கும் வகையில்
மேற்கொள்ளப்பட்ட இந்த நேரடி நியமனம், உள்ளூர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லாரி புரோக் (Larry Brock) மற்றும் பில் மெக்கோல்மேன் (Phil McColeman) ஆகிய இரு மூத்த தலைவர்கள் பொய்லியேவ் உரையாற்றிக்கொண்டிருந்த போதே, மேடையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இத்தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லாரி புரோக், மீண்டும் அரசு வழக்கறிஞர் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

அவர் டேவ் கேரல் (Dave Carrol) என்பவரைத் தனது வாரிசு வேட்பாளராக ஆதரித்து வந்த நிலையில், கட்சித்தலைமையின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த கன்சர்வேடிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாரா ஃபிஷர், “வரவிருக்கும் இடைத்தேர்தலைத் தாமதமின்றி எதிர்கொள்ளவும், உடனடியாகப் பிரசாரத்தைத் தொடங்கவுமே கட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கெவின் டேவிஸ் நியமிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

கனடியக் கன்சர்வேடிவ் கட்சியின் விதிகளின்படி, பொதுத்தேர்தல்களுக்கு  இடைப்பட்ட காலத்தில் எட்டு தொகுதிகள் வரை தலைவரே நேரடியாக வேட்பாளர்களை நியமிக்க அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை
கனடா

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

புரட்டாதி 23, 2026
பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்
கனடா

பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

புரட்டாதி 22, 2026
கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி
கனடா

கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

புரட்டாதி 21, 2026
ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

14 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In