ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனித்துவமான கூட்டணியை உருவாக்கும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது என கனடாவின் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் நியமனத்துக்கான வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கனடா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் கனடா–ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து மேலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.











