EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

புரட்டாதி 23, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி காலை இந்த படகு சேவைக்கான வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில், மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உலக சுற்றுலா தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (23) மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் பங்கேற்றிருந்ததுடன், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கீரி பீச்சை மையமாகக் கொண்டு இம்முறை உலக சுற்றுலா தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வின் போது மன்னார் மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் உணவுத் திருவிழா, நாட்டியம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், மாவட்டத்தில் வாழும் பல்வேறு மத சமூகங்களின் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகளும் விழாவின் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 25ஆம் திகதி பட்டப் போட்டிகளும், 26ஆம் திகதி கடற்கரைப் பந்தாட்டம் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும், 27ஆம் திகதி மாலை 4 மணிக்கு கபடிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வுகள் மூலம் மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றும் வாய்ப்பை உருவாக்க எதிர்பார்ப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கான படகு சேவை ஆரம்பிக்கப்படுவது மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறையில் முக்கியமான புதிய நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, வெகுவிரைவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அந்த மணல் திட்டுகளை நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
அண்மைய செய்திகள்

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

புரட்டாதி 23, 2026
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு

புரட்டாதி 23, 2026
கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
அண்மைய செய்திகள்

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

புரட்டாதி 23, 2026
துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை
அண்மைய செய்திகள்

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

புரட்டாதி 23, 2026
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

1 நாள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

2 நாட்கள் முன்னர்
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In